Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 14, 2025

நோய் உருவும் நாயுருவி!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உணவாக:

இதன் விதையைச் சிறிதளவு அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உட்கொண்டு வர, மூலம், ஆசன வாய் சார்ந்த நோய்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். பாசிப்பருப்பை மெலிதாக வேகவைத்து, அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு, உப்பு, நாயுருவி இலைகளைப் போட்டு வதக்கி, கூட்டு போலச் செய்து அரிசி சாதத்தில் பிசைந்து சாப்பிட, நாவில் சுவையும் உடலில் ஊட்டங்களும் அதிகரிக்கும். இதன் இலைகளைப் பொரியல் போலவும் செய்து சாப்பிடலாம்.

மழைக் காலத்தில் துளிர்விடும் இளம் இலைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. இருமலைத் தடுக்க, சவ்வாது மலைவாசிகள் இதன் வேர்ப்பொடியோடு, மிளகு சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிடுகின்றனர். சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் தன்மை உடையதால் வீக்கம், நீரடைப்பு போன்ற நோய் நிலைகளில் நாயுருவி சிறந்த மருந்து. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க, நாயுருவி, மிளகு, மண்டூரம் சேர்த்துச் செய்யப்படும் மருந்து, சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

மருந்தாக:

ஹீமோகுளோபின், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாயுருவி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை இதிலுள்ள ஃப்ளேவனாய்ட்கள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருந்துகளை வழங்கும்போது, இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘உப்பை’ சேர்த்துக் கொடுக்க, மருந்தின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும்.

ரத்தக் குழாய்களில் வீக்கமோ பாதிப்போ ஏற்படாமல் நாயுருவி பார்த்துக்கொள்ளும். ‘அலாக்ஸான்’ வேதிப்பொருளைக் கொடுத்து நீரிழிவு உண்டாக்கப்பட்ட எலிகளுக்கு, நாயுருவியின் சத்துக்களைக் கொடுத்துப் பார்த்ததில், சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News