Join THAMIZHKADAL WhatsApp Groups
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதத்தில் சென்னை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் விஜயவாடாவும், கடைசி இடத்தில் உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ்ஜும் இடம் பெற்றுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இதனால் சிபிஎஸ்இ முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இன்று மதியம் வெளியானது. நாடு முழுவதும் உள்ள 19,299 பள்ளிகளைச் சேர்ந்த 17,04,367 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில், 14,96,307 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது நடப்பு ஆண்டில் மொத்தம் 88.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இருந்தனர். கடந்த ஆண்டை விட தற்போது 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்த்தோம் என்றால் எப்போதும் தேர்ச்சி விகிதத்தில் டாப்பில் இருக்கும் திருவனந்தபுரத்தை பின்னுக்கு தள்ளி, விஜயவாடா முதலிடத்தை பிடித்தது. வழக்கம் போல் இந்த முறையும் டாப் 3 பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது. சென்னை மண்டலம் இந்த முறை 97.39 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
* விஜயவாடா - 99.60
* திருவனந்தபுரம் - 99.32
* சென்னை - 97.39
* பெங்களூர் - 95.95
* டெல்லி மேற்கு - 95.37
* டெல்லி கிழக்கு - 95.06
* சத்தீஸ்கர் - 91.61
* பஞ்ச்குலா - 91.17
* புனே - 90.93
* அஜ்மர் - 90.40
* புபனேஸ்வர் - 83.64
* கவுகாத்தி - 83.62
* டேராடூன் - 83.45
* பாட்னா - 82.86
* போபால் - 82.46
* நொய்டா - 81.29
* பிரக்யாராஜ் - 79.53.
No comments:
Post a Comment