Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 13, 2025

அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுவாக தென்மேற்கு பருவ மழை, மே, 20ம் தேதி வாக்கில், அந்தமான் கடல் பகுதியில் துவங்கும். இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் ஜூன், 1ல் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில், இன்று தென்மேற்கு பருவமழை துவங்கியது.

கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை (மே 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மே 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி களில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News