Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 13, 2025

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஐவிஆர்எஸ் வசதி அறிமுகம்.


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இந்த தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகிறது, நாளை தேர்வு முடிவுகள் என்று நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டே இருப்பதால் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள, பதிவு செய்யப்பட்ட குரல் அமைப்பு - ஐவிஆர்எஸ் (IVRS) வசதி அழைப்பு வழியாக மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணைய வசதி அல்லது தற்போதைய சூழ்நிலையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்காக, சிபிஎஸ்இ (CBSE) ஊடாடும் குரல் பதில் அமைப்பு (IVRS) மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் தங்கள் சரியான எஸ்டிடி (STD) குறியீட்டைக் கொண்டு சிபிஎஸ்இ அறிவித்திருக்கும் எண்ணை டயல் செய்து, மாணவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். இதற்கு, பதிவு செய்யப்பட்ட குரலின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் தகவல்கள் சரியாக இருப்பின், மாணவர்களின் தேர்வு முடிவுகளை இந்த அமைப்பு குரல் வழியாகவே வெளியிடும். மாணவர் பெற்ற மதிப்பெண்களை சப்தமாக வாசிக்கப்படும். இதன் மூலம் இணையதளம் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவர்களும் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment