Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 13, 2025

TN 10th Result 2025 | தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகிறதா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
TN 10th Result 2025 Date & Time: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தியது. சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். இப்போது, இந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பொதுவாக, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும். ஆனால், இந்த ஆண்டு மே 19-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியானதால், அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரத்தில் விசாரிக்கையில், திட்டமிட்டபடி மே 19-ம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில், தேர்வு நடைமுறைகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவாக முடிந்தாலும், முடிவுகளை வெளியிடுவதில் முறைப்படி காலக்கெடுவைப் பின்பற்றி வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதும், மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், மே 19-ம் தேதிக்காக காத்திருப்பது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News