தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு என்றாலே அண்ணா பல்கலைக்கழகம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்திய அளவில் தலைசிறந்த மாநில பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் உள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசையில் சர்வதேச அளவில் 383வது இடத்தையும். இந்தியாவில் 10வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துறைகள், உறுப்பு கல்லூரிகள், இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இருக்கும் பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தற்போது அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் சேர கூடிய படிப்புகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. இங்கு பல்வேறு பொறியியல் பாடங்களுக்கு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்விற்கு 2025 விண்ணப்பங்கள் ஜூன் 6-ம் தேதியுடன் பெறப்படுகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் (BE/B.Tech)குறைந்த கட்-ஆஃப் உடைய படிப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகம்
இந்திய அளவில் தலைசிறந்த மாநில பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் உள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசையில் சர்வதேச அளவில் 383வது இடத்தையும். இந்தியாவில் 10வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டியில் பொறியியல் கல்லூரி (CEG), குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP) என 4 வளாகங்கள் (Campus) இயங்குகிறது. இதில் முதல் மூன்று வளாகங்களில் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது.



No comments:
Post a Comment