Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 29, 2025

கொழுப்பு தானாகவே கரையும்... நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்


கொழுப்பு தானாகவே கரையும்... நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்: சொல்லும் டாக்டர் யோக வித்யா

உடலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு குறைக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும் பலர், தினசரி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் வடை, பூரி போன்ற எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் சாப்பிடுகிறார்கள் என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இந்த உணவுப் பழக்கத்தை தொடரும் போது, நீண்ட நாட்களுக்கு கொலஸ்ட்ரால் மாத்திரைகளை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார். இது குறித்த தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது ஞாபக மறதி பிரச்சனையை உருவாக்கக் கூடும் என்று மருத்துவர் யோக வித்யா சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.

நம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகள்தான் கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணம். எனவே, மருந்துகள் எடுத்துக் கொள்வதுடன் சேர்த்து, உணவு முறைகளை மாற்றியமைப்பதன் மூலம் கொழுப்பை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.

கூடுமானவரை எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் ஏற்கனவே உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் கருஞ்சீரகம் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் கொழுப்பைக் கரைக்கலாம்.

தினமும் சுமார் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்று மருத்துவர் யோக வித்யா வலியுறுத்துகிறார். அதனடிப்படையில், இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும்.

No comments:

Post a Comment