Join THAMIZHKADAL WhatsApp Groups
12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் இளங்கலை படிப்புகளை சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பினால், அவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 27.05.2025 ஆகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில், உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில், 2380 இடங்களுடன் மாநிலக் கல்லூரியும், 2038 இடங்களுடன் இராணி மேரி கல்லூரியும், 1410 இடங்களுடன் பாரதி மகளிரி கல்லூரியும், 1086 இடங்களும் டாக்டர் அம்பேத்கர் அரசுக் கலை கல்லூரியும், 1468 இடங்களுடன் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியும். 590 இடங்களுடன் ஆர்.கே.நகர், அரசுக் கலை கல்லூரியும். 1430 இடங்களுடன் நந்தனம், அரசுக் கலை கல்லூரியும், 280 இடங்களுடன் ஆலந்தூர், அரசுக் கலை கல்லூரியும் என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்குப் புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்" திட்டங்கள் மூலமாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன் திட்டம்' மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம். 07.05.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 27.05.2025 ஆகும். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48/-ம், பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டுமே ஆகும். இதில் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card/ Credit Card/ Net Banking/ UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அணுகலாம். மேலும் தொடர்புக்கு 044-24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment