Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 24, 2025

அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்த நகல்கள் மட்டும் இருந்த போதும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு 27.05.2025 07.05.2025 முதல் வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்..இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு 27.05.2025 07.05.2025 முதல் வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அருகாமையில் உள்ள விண்ணப்பிக்கலாம். அரசு கல்லூரிக்குச்சென்று இந்த ஆண்டு தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் சுழற்சி 2-இல் 4 புதியப் பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம் பின்வருமாறு. காணலாம்.

BA இலக்கியம் 60 இடங்கள், B.Sc உயிர் வேதியியல் (EM) 40 இடங்கள், B.Sc உயிரி தொழில்நுட்பவியல் (EM) 40 இடங்கள், B.Sc விலங்கியல் (EM) 40 இடங்கள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுழற்சி 2-இல் 7 பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம் பின்வருமாறு B.B.A வணிக நிர்வாகவியல் 60 இடங்கள், B.Sc வேதியியல் (TM) 40 இடங்கள். B.Sc வேதியியல் (EM) 40 இடங்கள், B.Sc விலங்கியல் (TM) 40 இடங்கள், B.Sc விலங்கியல் (EM) 40 இடங்கள், B.Sc தாவரவியல் (TM) 40 இடங்கள். B.Sc தாவரவியல் (EM) 40 இடங்கள்‌‌.

கும்பகோணம், அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுழற்சி 2-இல் 1 பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.B.Com வணிகவியல் (EM) 60 இடங்கள் உள்ளன.பேராவூரணி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுழற்சி 1-இல் 2 பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம் பின்வருமாறு B.A பொருளியல் (EM) 70 இடங்கள். B.A அரசியல் அறிவியல் 70 இடங்கள் உள்ளன.கும்பகோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி 2-இல் 6 பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரம் பின்வருமாறு.

B.B.A வணிக நிர்வாகவியல் (EM) 50 இடங்கள், B.C.A (EM) 40 இடங்கள். B.Sc வேதியியல் (EM) 30 இடங்கள், B.Sc இயற்பியல் (EM) 35 இடங்கள், B.Sc விலங்கியல் (EM) 35 இடங்கள்.B.Sc கணினி அறிவியல் (EM) 40 இடங்கள்ஒரத்தநாடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1120 இடங்கள். திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 240 இடங்கள் உள்ளன.

மேலும், புதியதாக திருவிடைமருதூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 பாடப்பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ளது.B.Sc கணினி அறிவியல் 50 இடங்கள். B.Com CA (EM) 60 இடங்கள். B.Com Banking & Insurance Management (EM) 60, B.Sc Home Science, Clinical Nutrition & Dietetics (EM) 50, B.A Criminology & Political (EM) 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மொத்த இடங்கள் 270.மேலும், மாணவர் சேர்க்கைச் செயல்முறை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தை 044-24343106, 24342911 என்ற எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News