Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 13, 2025

ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான அப்டேட்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பணவீக்கம் காரணமாக ஆண்டுக்கு பல முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் பயனடைவார்கள். மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை பரிசீலித்து வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள்

மார்ச் மாதத்தில் மத்திய அரசு 2% அகவிலைப்படி உயர்த்தியது. இது ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது. பணவீக்கம் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. மத்திய அரசுடன், மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தப்படும்


ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் AICPI குறியீடு 143.2 ஆகவும், பிப்ரவரி மாதம் 142.8 ஆகவும், மார்ச் மாதம் 143.0 ஆகவும் இருந்தது. இந்தக் குறியீட்டைப் பொறுத்து அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கப்படும்.


அகவிலைப்படி எவ்வளவு உயரும்?

ஜூலை மாதத்தில் குறைந்தபட்சம் 3% அகவிலைப்படி உயரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். பணவீக்கம் குறைந்தால் 2% உயர்த்தப்படலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News