Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மற்றும் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள இந்த ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்
/indian-express-tamil/media/media_files/VGZfTkhPSsWvk3hoSi4d.jpg)
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு மற்றும் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாகவே விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் எதிர்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், விண்ணப்பப் பதிவு மற்றும் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள்
1). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
3). மாற்றுச் சான்றிதழ்
4) சாதிச் சான்றிதழ்
சிறப்பு சான்றிதழ்கள் (தேவைப்படுவோருக்கு மட்டும்)
1). முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்
2). இருப்பிட சான்றிதழ்
3). 7.5% இடஒதுக்கீட்டுக்கு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்
4). விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ்
5). மாற்றுத்திறனாளி சான்றிதழ்
6). முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்
கூடுதலாக தேவைப்படும் சான்றிதழ்கள்
1). வருமானச் சான்றிதழ் (எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி)
2). பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
3). மாணவரின் கையொப்பம்
4). 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
5). ஆதார் அட்டை
No comments:
Post a Comment