Join THAMIZHKADAL WhatsApp Groups
வைட்டமின் சத்துக்களில் வைட்டமின் A, C, B7, K மற்றும் இரும்புச் சத்து உள்ளது. நுங்கில் மினரல் சத்துக்களான சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் உடல் வறட்சியைப் போக்கவும் உதவுகிறது.
கோடை வெயிலை சமாளிக்க சிறந்த வழி.. எளிய வழி எதுவெனில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டும்தான். இதை நீங்கள் சரியாக செய்தாலே எப்பேர்பட்ட வெயில் தாக்கத்தையும் சமாளித்துவிடலாம். இதனால் கோடைக்கால பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதற்காக உடனே கார்பனேட் நிறைந்த சோடா, கோக் பானங்களை குடிப்பது சரியான தீர்வல்ல. குறைந்தபட்சம் தண்ணீர் குடிப்பதே போதுமானது. இருப்பினும் உடலுக்கு தேவையான ஆற்றல் வேண்டுமெனில் தண்ணீரோடு நிறுத்திக்கொள்ளாமல் சில ஆரோக்கியம் நிறைந்த கோடைக்கால பானங்களை பருகுவதும் வெயில் வெப்பத்தை சமாளிக்க உதவும்.

அந்தவகையில் சம்மர் என்றதுமே நுங்கு விற்பனை படு ஜோராக நடக்கும். இந்த நுங்கு கோடைக்காலத்தில் உங்கள் தாகத்திற்கு பலனாக மட்டுமல்லாமல் கோடைக்கால நோய்கள் , உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த பலனை தருகிறது. குறிப்பாக வேர்க்குரு, அம்மை நோய் என தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நுங்கு சிறந்த மருந்தாக உள்ளது. கிராமங்களில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த நுங்கு தற்போது நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவற்றை வாரம் 2 அல்லது 3 முறை வாங்கி சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.
இந்த நுங்கை ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பில் என செல்லமாக அழைக்கின்றனர். இதில் உடலுக்குத் தேவையான மினரல்ஸ் மற்றும் சர்க்கரை இருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. அதோடு , கார்போஹைட்ரேட், ஃபைட்டோனியூட்ரியன்ஸ், கால்சியம், ஃபைபர் ஆகியவை உள்ளன. வைட்டமின் சத்துக்களில் வைட்டமின் A, C, B7, K மற்றும் இரும்புச் சத்து உள்ளது. நுங்கில் மினரல் சத்துக்களான சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் உடல் வறட்சியைப் போக்கவும் உதவுகிறது.
நீரேற்றத்தை மேம்படுத்துகிறது : நுங்கில் 90% தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே உடலுக்கு தேவையான நீர் ஆகாரத்திற்கு சிறந்ததாக உள்ளாது. அந்த தண்ணீரில் எலக்ட்ரோலைட் இருப்பது ஆற்றலுக்கு உதவுகிறது. இதனால் தசைக்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கப்பெறுகிறது.
உடல் சூட்டை தணிக்கிறது : வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகரித்து அதனால் நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும். இதற்கெல்லாம் சிறந்த மருந்து நுங்குதான். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி , உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதனால் வெயிலால் உண்டாகும் ஸ்ட்ரோக் ஆபத்தையும் தவிர்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது : நுங்கில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. அதுமட்டுமன்றி வயிறு மந்தம், குமட்டல், செரிமானப் பிரச்சனைகள் என கோடைக்காலத்தில் வரும் பொதுவான பிரச்சனைகளும் இருக்காது.

ஆற்றலை அதிகரிக்கிறது : நுங்கில் இருக்கும் இயற்கையான சர்க்கரை சட்டென உங்கள் ஆற்றலை தூண்ட உதவுகிறது. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. கோடைக்கால சோர்வு இல்லாமல் நாள்முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். அதோடு அதில் இருக்கும் புரோட்டீனும் உங்கள் ஆற்றலுக்கு உதவுகிறது.

சரும ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது : கோடைக்காலத்தில் வரும் சரும அரிப்பு, தோல் வேர்க்குரு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நுங்கில் உள்ள 90% தண்ணீரே போதுமான பலனை தருகிறது. அதுவே சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
No comments:
Post a Comment