தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நல்ல ஆர்வம் உள்ளது. அதனை குறிப்பிடும் வகையில், பொறியியல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் முன்னணியில் உள்ளது. அதேநேரம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் எனப்படும் இ.சி.இ பிரிவுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் இ.சி.இ படிக்க சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அரசு பொறியியல் கல்லூரிகள்
1). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
2). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
3). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
4). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
5). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
6). அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி
7). அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி
8). தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், வேலூர்
9). அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி
10). அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்
11). அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்



No comments:
Post a Comment