2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் செயல்படுத்தப்பட்டது. அதேசமயம், இந்தத் திட்டம் அறிமுகம் செய்தபோது விண்ணப்பித்த சிலர் பயனாளிகளாக சேர்க்கப்படவில்லை. அதேபோல், பலரும் புதிதாய் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.



No comments:
Post a Comment