நாளை முதல் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை ஜூலை 1 ஆம் தேதி ரயில் தட்கல் டிக்கெட் வசதி முதல் பல்வேறு மாற்றங்கள் நிகழ் போகின்றன. மாதாமாதம் எல்பிஜி சிலிண்டர் விலை உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அது போல் நாளை ஜூலை 1 ஆம் தேதி முக்கிய மாற்றங்கள் நிகழ போகின்றன. அந்த வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை கூடுமா, இல்லை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Also Read "ஒரே வாரத்தில் 2,000 சரிந்த தங்கம் விலை.. இன்றும் அதிரடியாக குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி!" புதிய பான் கார்டை பெற விரும்பும் நபர்கள் ஜூலை 1, 2025 முதல் உங்களிடம் ஆதார் கார்டு இருத்தல் வேண்டும்.
மேலும் ஒருவரின் பான் கார்டு, ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் அதை டிசம்பர் 31, 2025-க்குள் இணைக்க வேண்டும். இந்த இணைப்புக்கு நிறைய முறை அரசு கால அவகாசம் கொடுத்துவிட்டது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு, கட்டணங்கள் தொடர்பாகவும் மாற்றங்களைச் செய்துள்ளது. ஏசி வகுப்பு அல்லது நான்- ஏசி பெட்டிகளில் பயணிக்கும் விலை ஓரளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏசி இல்லாத பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்புள்ள பெட்டிகளில் பயணம் செய்ய கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயிலில் காத்திருப்பு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த இருக்கையில் 25 சதவீதத்திற்கு அதிகமாக காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படாது.
அதாவது ஒரு பெட்டியில் 100 இருக்கைகள் இருந்தால் 25 காத்திருப்பு டிக்கெட்டுகள் (waiting list) மட்டுமே கிடைக்கும். எனினும் இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Recommended For You " Today Gold Rate: தங்கம் விலை இன்ப அதிர்ச்சி நீடிக்குமா? வாரத்தின் முதல் நாளில் விலை நிலவரம்.. கூடுமா, குறையுமா?" ADVERTISEMENT (4) - Continue to video நாளை முதல் IRCTC கணக்கை ஆதாருடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது தவிர ஜூலை 15 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிடுவது அவசியம். ஓடிபி கொடுக்காவிட்டால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ ஏடிஎம்மில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ 23 செலுத்த வேண்டும். பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 5 முறையும், பெருநகரங்களில் 3 முறையும் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் பணம் செலுத்த வேண்டும். ஜூன் மாதமே இபிஎஃப்ஓ 3.0 தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதமான நாளை முதல் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. இபிஎஃப் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ஏடிஎம்மில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம் என்ற வசதியும் அமலுக்கு வரும் என தெரிகிறது.



No comments:
Post a Comment