அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு.

சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 1981-82 ஆம் கல்வியாண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை படித்து, அரியர் (arrier) வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறக் கடைசி முறையாக ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் கடந்த 1981-82 முதல் 2018-ம் ஆண்டு வரை இளங்கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி, அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறக் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
டிசம்பரில் தேர்வு:
இந்த அரியர் பாடங்களுக்கான சிறப்புத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்:
இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், வரும் 10ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ideunom.ac.in -இல் பதிவேற்றம் செய்யப்படும். தகுதியுள்ள மாணவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1981-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment