தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வு 2025 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் விடைத்தாள் பகுப்பாய்வு மற்றும் வெட்டு மதிப்பெண்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக, பிரபல பயிற்சி நிறுவனமான அட்டா27 தமிழ் சார்பில் தேர்வு பகுப்பாய்வு மற்றும் வெட்டு மதிப்பெண் கணிப்பு வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பகுப்பாய்வின்படி, காவலர் தேர்வுக்கான வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான கேள்விகள் வழக்கமான பி.சி தேர்வின் தரத்தில் இருந்தன. அதிக எண்ணிக்கையிலான கூற்று அடிப்படையிலான கேள்விகள் இடம்பெறவில்லை என்றும், பொருத்துக கேள்விகளில் ஒரு விடையைத் தெரிந்துகொண்டாலே முழு பதிலையும் கண்டறியும் வகையில் எளிமையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 கேள்விகளைக் கொண்ட தமிழ் தகுதித் தேர்வில் 32 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தாலே போதுமானது. தமிழ் பேப்பர் கொஞ்சம் எளிமையாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பெண்கள் தரவரிசைக்குப் பரிசீலிக்கப்படாது. தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும் 70 கேள்விகள் கொண்ட பிரதானத் தேர்வில், அறிவியல் பாடத்திலிருந்து சுமார் 16 கேள்விகளும், வரலாறு பகுதியில் இருந்து சுமார் 5 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.
பொதுவாக வெட்டு மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் முக்கியப் பங்காற்றும் நடப்பு (current affairs)நிகழ்வுகள் பகுதி எதிர்பாராத விதமாக 1 அல்லது 2 கேள்விகளுடன் குறைவாக இருந்ததே, ஒட்டுமொத்த வெட்டு மதிப்பெண் கூட ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. வினாத்தாள் மிதமான அளவில் இருந்ததாலும், நடப்பு நிகழ்வுகள் கேள்விகள் குறைந்ததாலும், இந்த ஆண்டு வெட்டு மதிப்பெண்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இருபாலருக்கும் மொத்தம் 70 கேள்விகள் உள்ள நிலையில் ஆண்களுக்கு 62 முதல் 64 கேள்விகளும் பெண்களுக்கு 56 முதல் 58 கேள்விகளும் சரியாக பதில் அளித்திருக்க வேண்டும். 60 கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளித்த ஆண் தேர்வர்கள், இப்போதே உடற்தகுதித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு 56 கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளித்த பெண்களும் உடற்தகுதிப் பயிற்சிக்குத் தயாராகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வரும் விளையாட்டுப் பிரிவுத் தேர்வர்களுக்கு, பொதுப் பிரிவில் இருந்து சுமார் 10 கேள்விகள் வரை கம்மியாகும் வாய்ப்புள்ளது என்றும், சுமார் 48 கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளித்தவர்கள் பயிற்சியைத் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும், உடற்தகுதித் தேர்வு அடுத்த 50 நாட்களில் நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment