அன்பு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உதவி திட்ட அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றை நாளில், நாம் ஒரு வரலாற்று சாதனையை எட்டப்போகிறோம்.
38110 மையங்களில், 38110 தன்னார்வலர்கள், 50,000, ஆசிரியர்கள், 3000, ஆசிரியப் பயிற்றுநர்கள், 500 அலுவலர்கள் என்று ஏறத்தாழ 1,00,000 பேர் என அனைவரும் இணைந்து நடத்தும் தேர்வு இதுவே ஆகும்.
எனவே, அனைத்து கற்போர்களையும் தேர்வு எழுத வைத்தால்,
நாம் முழு எழுத்தறிவுப் பெற்ற மாநிலமாக அறிவிக்கப்படுவோம்.
இதற்கு முழு முதல் காரணம் அர்பணிப்பு மிக்க நீங்கள் அனைவரும் தான்.
மேலும், இத்திட்டத்தின் அச்சாணியாக உள்ள தன்னார்வலர்கள் களும் தான்.
இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக துறையின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடக்கும் தேர்வு விவரங்களை மைய வாரியாக பதிவு செய்து, ஒன்றிய வாரியாக, மாவட்டவாரியாக, ஒளிப்படம் எடுத்து ஆவணப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மலைக் கிராமங்களில், தொலைதூரப் பகுதிகளில், தனித்தனி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கற்போருக்கு, அவர்கள் இடங்களிலேயே தேர்வு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றும் ஒரு மணிக்கு ஒரு முறை தேர்வு எழுதுபவர் விவரங்களை சம்பந்தபட்ட, ஒன்றிய, மாவட்ட, ஒருங்கிணைப்பாளருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் உங்களோடு, பொன்.குமார், இணை இயக்குநர்



No comments:
Post a Comment