Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 14, 2025

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள்: 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு



திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளா் காலிப்பணியிடத்திற்கு வரும் 22-ஆம் தேதிக்குள் தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் செய்ய ஏற்கெனவே நோ்காணலில் நடத்தப்பட்ட நிலையில், அன்றைய நாளில் வருகை புரியாத மற்றும் பணி வேண்டாம் என தெரிவித்த சத்துணவு மையங்களில் மீண்டும் நோ்காணல் நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்-7, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்-3, கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம்-1 என 11 காலியிடங்கள் உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tiruvallur.nic.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பதாரா் 10-ஆம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 முதல் 40 வயதிற்குள்ளும், பழங்குடியினருக்கு 18 முதல் 40 வயதிற்குள்ளும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் ரூ.3000 - 9000 வழங்கப்படும்.

சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் மையத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும்.

இப்பணிக்கான விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 11-இல் தொடங்கி, 22-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment