Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 1, 2026

இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் எப்போது? ஆதவ் அர்ஜுனா




அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத வேதனைகளோடு போராடி வருகிறார்கள் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்;

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். புத்தாண்டான இந்த நாளில்கூட அவர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை இப்படி ரோட்டில் முழங்காலிட்டும், பிற வகைகளிலும் போராட வைத்து வேடிக்கை பார்ப்பதுதான் இந்த ஆட்சியின் லட்சணமா? முதல்-அமைச்சர் , அமைச்சர்கள் என நீங்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடி வரும்போது, உங்களுக்கு வாக்களித்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத வேதனைகளோடு போராடி வருகிறார்கள்.

போராடும் ஆசிரியர்களை திமுக அரசு பலவந்தமாகக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற முழக்கத்தை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு விடியல் எப்போது? தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு, இன்று அதற்காக அவர்கள் போராடும் உரிமையைக் கூட சர்வாதிகாரமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு.

இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து தரப்பு ஊழியர்களையும் அடிப்படை உரிமைக்காக அன்றாடம் போராட வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment