தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது.
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் இனி பெற்றோர்களும் முடிவு எடுக்கலாம். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தாக்கல் செய்த ”தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் திருத்தச் சட்டமுன்வடிவு - 2026 நிறைவேற்றப்பட்டது.
விண்ணை தொடும் தனியார் பள்ளிகளின் கட்டணம்
தேசிய அளவில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் என்பது விண்ணை தொடும் அளவில் உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி முதல் தொடக்கப்பள்ளிகளிலேயே லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் சட்டம் 2009 அமல்படுத்தப்பட்டது.
தனியார் பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயிக்க குழு
இச்சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ண குழு உருவாக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதியின் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு நிர்ணத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இக்குழு கட்டணம் நிர்ணயிக்க அதிகாரம் உள்ள நிலையில், வழக்குகளின் காரணத்தினால் சிபிஎஸ்இ மற்றும் இசிஎஸ்இ பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் இக்குழுவின் கீழ் வருவதில்லை.



No comments:
Post a Comment