Breaking

Sunday, January 25, 2026

தனியார் பள்ளி கல்வி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு!! பெற்றோர்களே தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!


குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. பெற்றோர் ஒரு கணிசமான தொகையை குழந்தைகளின் கல்விக்காகவே ஒதுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அதுவும் தனியார் பள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.எல்கேஜி போன்ற தொடக்க வகுப்புகளுக்கே ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக கேட்கிறார்கள். படிப்படியாக குழந்தைகள் வகுப்புகள் ஏற ஏற கல்வி கட்டணமும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் திடீரென கல்வி கட்டணங்களை உயர்த்தி விடுகின்றன. இது பெற்றோருக்கு பெரிய மிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான சமயங்களில் பெற்றோர் அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தியே ஆக வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு உருவாக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.ஆனால் இந்த குழுவில் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய சட்டத்தில் புதிய திருத்ததை கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறார். இதன்படி தனியார் பள்ளிகளின் அதிக கட்டணத்தால் பாதிக்கப்படுவது பெற்றோர்.

எனவே அவர்களின் கருத்துக்களை கேட்டு கட்டணம் நிர்ணயிப்பது முறையாகும் என்பதை ஏற்று தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவில் மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் இடம்பெறும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டண நிர்ணயக் குழுவில் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தனியார் பள்ளி உறுப்பினர்கள் ,பொதுப்பணித்துறையில் இருந்து இணை தலைமை பொறியாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவாக இது செயல்படும்.வீட்டில் இருந்தபடியே பத்திர பதிவு!! சார் பதிவாளர் அலுவலகத்துக்கே போக வேண்டாம்!! வாட்ஸ் அப் சேவையும் உண்டு!!கல்லி கட்டணம் நிர்ணயம் செய்வதில் பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டம் உன் முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரின் மூலம் பெற்றோரின் கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படும். விரைவில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட இருக்கிறது.இது தவிர தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கவும் இந்த சட்ட முன்வடிவு வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த குழு கட்டணம் நிர்ணயிக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் இந்த குழுவின் கீழ் வருவதில்லை.

No comments:

Post a Comment