Breaking

Saturday, January 24, 2026

விழிப்புணர்வும் சிரத்தையும் :


1) கரந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும்.
2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் கானாமல் போவார்கள்.
4)வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள். இளநீர் குடியுங்கள் காணாது போகும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்
5) ஞாயிற்றுக்கிழமை என்றால் புலால் என்பதை விடுத்து முன்னோர்களை போல விசேசங்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள் பிராய்லர் காணாது போகும் முடிந்தவரை இடம் உள்ளவர்கள் நாட்டு கோழி வளருங்கள்.
6) கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்.
7)ஒரு சீமை கருவேலத்தை வேரொடு சாயுங்கள் வரட்சி குறையும்.
8)நீர் நிலைகளில் குப்பைகளையும் வீட்டு கழிவுகளையும் கலக்காதீர்கள். நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
9) இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். வரும் தலைமுறைகள் நோயின்றி வாழட்டும்.
10) போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிருங்கள். உடல் வலிமையும்,மன உறுதியும் உண்டாகும்.
11) அன்னிய நாகரீகம் வேண்டாம். நமது பண்பாடே உயர்வானது.

No comments:

Post a Comment