Breaking

Saturday, January 24, 2026

தேசிய கீதம் தமிழாக்கம்


வரலாற்றில் இன்று ஜனவரி 24

ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜனவரி 24.1950 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றிய வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய கீதம்
*************************************************

ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய 'ஜன கண மன’ என்ற பாடலின் இந்தி வடிவம் நம் தேசிய கீதமாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேசிய கீதம் தாகூர் நடத்திய 'தத்வபோதினி பத்ரிகா’ என்ற பத்திரிகையில் 'பாரத் விதாதா’ என்ற தலைப்பில் 1912-ல் வெளியானது.

'ஜன கண மன’ பாடல் முதன் முதலாக 1911, டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

ஐந்து பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிக்குள் பாடவேண்டும்.

முதல், கடைசி பத்திகளை மட்டும் கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடிகள்.

நம் தேசிய கீதத்தில் இரு நதிகள், இரு மலைகள், ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற் றுள்ளன.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 'திராவிட’ என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன.

'உத்கல்’ என்ற சொல் ஒடிசாவைக் குறிக்கிறது.

தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுமையும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

தேசிய கீதத்துக்கு இசை அமைத் தவர் ஹஃபீஸ் ஜலந்தாரி. 

1919 ல் ரவீந்தரநாத் தாகூர் Morning Song of India என்ற தலைப்பில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நாட்டுப்பண்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே!
-ரவீந்திரநாத் தாகூர்

நாட்டுப்பண்னின் தமிழாக்கம்

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..

பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,

திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒடிஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..

மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டிருக்கின்றன..

உனது மங்களகரமான திரு நாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,

உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,

உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக் கிறோம்..

இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ... வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ...

வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!

வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!

No comments:

Post a Comment