Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2014

இப்படிஓர் ஏமாற்றம்




இப்படிஓர் ஏமாற்றம 
G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,P.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit:  www.thamizhkadal.com

புன்னகைக்கும் பூமலரே வாசமுள்ள ரோசாவே
உனைகண்ட நாள்முதலா உனைச்சுற்றும் வண்டானேன்
உன்மொழிகள் கேட்பதற்கு தினந்தினம்நான் காத்திருந்தேன்
உன்பேச்சைக் கேட்டால்தான் பகல்பொழுதும் முகம்காட்டும்
என்நினைவும் தேரேறி பூமியெங்கும் சுற்றிவரும்
உன்னாலே என்இதயம் பழுதின்றி இயங்குதடி

முன்னொருநாள் நீசொன்ன வார்த்தைகளோ தேனாக
இனித்ததடி பின்னொருநாள் நீசொன்ன வார்த்தைகளோ
என்நெஞ்சில் தீவாறிக் கொட்டுதடி கண்மணியே
வான்தொட்ட என்மனசு கீழ்வீழ்ந்து மாய்ந்ததடி.

நீசொன்ன வார்த்தைகளால் என்இதயம் இயங்கியது
வாசம்போல் எங்கெங்கோ நினைவலைகள் ஓடியது
இல்லைஎன்று நீசொன்ன பேச்சதனைக் கேட்டதுமே
மலைதொட்ட என்நெஞ்சம் கீழ்வீழ்ந்து மாய்ந்ததடி.

உன்வார்த்தை என்நெஞ்சில் பால்வார்த்து நின்றதடி
உன்நேசம் தேடியே என்னிதயம் சென்றதடி
எனக்குள்ளே ஆசைகளை வளர்த்துவிட்டு பூமலரே
பின்னாளில் கல்தூக்கிப் போட்டாயடி தலைமேலே

பெண்ணே

இப்படிஓர் ஏமாற்றம் இதுவரைநான் கண்டதில்லை
எப்போதும் என்உள்ளம் உனைமறந்து இருந்ததில்லை
ஆசைகளை வளர்த்துவிட்டு அடியோடு வெட்டிவிட்டாய்
பசியோடு இருந்தவனை உண்ணசொல்லி மறுத்துவிட்டாய்
இனிநீ என்னதான் செய்தாலும்
என்உள்ளம் அமைதி அடைய போவதில்லை.
                                     
                                     முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd., Dip.(Acu)
                                இரட்டணை