Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2014

அழும் நேஞ்சே


அழும் நேஞ்சே

போராட்டம் நிறைந்திருக்கும் உலகவாழ்வில் சோகங்கள்
நீரோட்டம் தரலாம்கண் களில்ஒருநாள் ஊர்போற்றும்
பாராட்டும் வாழ்க்கையும் வெகுவிரைவில் கிடைத்திடும்

மனம்தளரா உழைத்திடுநீ இழந்தபொருள் உனைத்தேடி
கணப்பொழுதில் காலடியில் வந்துசேரும் அழும்நெஞ்சே

ஏமாற்றம் எவ்வளவு தொடர்ந்தாலும் தளராதே
உமைநேசம் செய்வாரை நேசிபிறர்க் குநீசொல்லும்

வார்த்தைகள் அலட்சியமாய் தெரியலாம் வருந்தாதே
பிறர்க்காக கலங்காதே உனைநேசி வாழ்வினிக்கும்

என்றாவது

உந்தன் அன்பைப் புரிந்து கொள்வார்
உந்தன் அறிவுரையும் புரியும்
யாரெப்படி போனால் உனக்கென்ன கவலைவிடு.

                                   முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd., Dip.(Acu)
                                இரட்டணை