Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2014

செத்து மடிவேன்…



செத்து மடிவேன்…

கண்ணீரில் கரையாத மனங்களும் உண்டோநான்
கண்ணீரைச் சிந்தியும் கேட்டுவிட்டேன் பதில்இல்லை
என்பாசம் உனைநனைக்க உன்அன்பு எனைபினைக்க
மண்மேலே நம்காதல் வேர்விட்ட அந்நாளில்

கண்சிமிட்டும் தாமரையே பசிதீர்க்கும் அன்னமே
உன்தனங்கள் நான்தொட்டேன் மல்லிகப்பூ கல்லாச்சி

சின்னசின்ன தாரகையே தேன்சொறியும் பூவனமே
உன்இதழ்கள் நான்சுவைத்தேன் தேன்துளிகள் கசப்பாச்சி

உண்ணஉண்ணத் தெகிட்டாத தங்கநிற பேரழகே
உனைகட்டி அணைக்கையிலே பூமெத்தை பாறையாச்சி

என்அன்பே

இத்தனையும் நமக்குள்ளே நடந்தபின்னும் அன்பின்றி
பித்தனாக்கி எனைமறந்து போன தேனோ?
சத்தியமாய் ஒன்றுகேள் பெண்ணே
செத்து மடிவேன் நீயில்லை என்றாலே.

                                    
G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in