Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 21, 2018

கால்நடை மருத்துவம்: 12,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

பி.வி.எஸ்சி. உள்ளிட்ட கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர மொத்தம் 12,217 மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன.

பி.வி.எஸ்சி படிப்புக்கு 360 இடங்கள், பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் மே 21 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 18-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.



இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் குழுத் தலைவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை மருத்துவப் படிப்புக்கு 10,207, பி.டெக். படிப்புகளுக்கு 2,010 என மொத்தம் 12,217 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 3-ஆவது வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு...வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வரும் ஜூலை 6-ஆம் தேதி கடைசியாகும்.

இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ்வுகளுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூலை 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.



மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.