Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 21, 2018

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, ஜூன் 17 -ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் தேதி ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
படிப்புகள்: பி.எஸ்சி. வேளாண்மை (B.Sc.(Hons. Agriculture), பி.எஸ்சி. தோட்டக்கலை (B.Sc.(Hons.) வேளாண் சுயநிதிப் படிப்புகள்: (Agriculture-Self Supporting) பி.எஸ்சி. தோட்டக்கலை(B.Sc.(Hons.) Horticulture / Diploma in Agriculture/Diploma in Horticulture) மற்றும் B.F.Sc. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் (5 Year Integrated Programmes/ பி.இ. லேட்டரல் என்டரி படிப்புகள்: (B.E., Lateral Entry), பி.ஃபார்ம். (B.Pharm.), பி.பி.டி. (B.P.T), பி.ஒ.டி. (B.O.T) மற்றும் பி.எஸ்சி. நர்சிங் B.Sc.Nursing), டி.ஃபார்ம். (.D.Pharm) உள்ளிட்ட பாடப் பிரிவுகள்.