Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 21, 2018

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியீடு




பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதில் மறு கூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இந்தப் பட்டியலில் இல்லாதவர்களின் மதிப்பெண்களின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.




மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.