Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 31, 2020

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவு!



கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினாலோ, கட்டணம் வசூலித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment