Breaking

Tuesday, March 24, 2020

கொரோனா வைரஸ் குறித்த எந்த தகவலையும் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரக்கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை



கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உயிரிழப்பு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 467 பேர் பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் கைது தொடர்கிறது.




கொரோனா வைரஸ் தொடர்பாக இனி எந்த செய்தியையும் தன்னிச்சையாக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டாம் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும். தவறான செய்தி பரப்பினால், கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விட்டுள்ளது. எனவே குழுஅட்மின்கள் இதை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும், உறுப்பினர்கள் கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment