Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 24, 2020

நேத்திரப் பூண்டு தரும் நன்மைகள்



நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது உயரமாக வளரும்.சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை 'அற்றலை பொருத்தி' என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர்.



இதன் தண்டை ஒடித்து விட்டு மீண்டும் பொருத்தினீர்கள் என்றால் பொருந்திக் கொள்ளும். அதனால் இந்தப் பெயர் வந்துள்ளது. இதிலுள்ள பசைச் சத்தே இதற்கு காரணம். ஆனால் உண்மையான பெயர் 'அருந்தலை பொருத்தி'. இதன் பெயரிலேயே இதன் பயன் உள்ளது. நேத்திரம்= கண். நேத்திரப் பூண்டு தைலம் கண் நோய்களுக்கு மட்டுமல்ல வயிற்றுப்புண்,ஒற்றைத் தலைவலி,செரிமானக்கோளாறு, கிராணி போன்ற நோய்களுக்கு வழங்கலாம்.

No comments:

Post a Comment