Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 24, 2020

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தேர்ச்சி


கரோனா அச்சுறுத்தல், நெருக்கடிக்களுக்கு ஆளாகியிருக்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 9 -ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தேர்ச்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 400 போ வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், 9 போ உயிரிழந்துள்ளனா். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை மாா்ச் 31 வரை முடக்கி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



கரோனா பாதிப்புகள் எத்தனை நாள்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் என்று தீா்மானிக்க முடியாத நிலை உள்ளது. முற்றாக ஒழிக்கப்படும் வரை முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதைத் தவிா்த்து வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே, உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும் என்பதோடு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் தினக் கூலிகள், சிறு வணிகா்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.



மேலும், முழு ஆண்டு தேர்வை எதிா் நோக்கியுள்ள மாணவா்களின் நிலை குறித்து தமிழக அரசு குழப்பமற்ற தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களைப் போன்று 9- ஆம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து, அவா்களை தேர்ச்சி பெற்றவா்களாக அறிவிப்பதுடன், பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை இயல்புநிலை திரும்பும் வரை ஒத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment