
திருப்பூர்:திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடுகள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளி வாரியாக சரிபார்க்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில், 80 சதவீதமும், வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீதமும் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, அனைத்து பள்ளியில் படிக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் வருகை பதிவேட்டை, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திருப்பூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. அவர் கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 16 வரையில், 187 நாட்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 29 வரையில், 176 நாட்களும் வருகைப்பதிவு நாட்கள் கணக்கிடப்பட்டன,'' என்றார்.
No comments:
Post a Comment