Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 20, 2020

தலைமுடி பராமரிப்புக்கு உதவும் தேங்காய் பால்


தலைமுடி பராமரிப்புக்கு தேங்காய் பால் நல்ல பலனை கொடுக்கக் கூடியது.

தேங்காய் பாலில் அதிக அளவிலான கொழுப்புகள், புரதங்கள், சோடியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மேலும் சில ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. தலைமுடி பராமரிப்பு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் பயன்படுகிறது. வீட்டிலேயே தேங்காய் பால் எப்படி தயாரித்து உபயோகிப்பது என்பதை இதில் காண்போம்.

தேங்காய் பால் தயாரிக்கும் முறை:

கடைகளில் கிடைக்கும் தேங்காய் பாலை விட அதனை வீடுகளில் தயார் செய்வது நல்லது. தேங்காயை நன்றாக துருவி, ஒரு துணி வைத்து அதில் உள்ள சாறை வடிகட்டிக் கொள்ளுங்கள். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதனை குளிரவைத்து பயன்படுத்துங்கள். குளிர்சாதனப் பெட்டியில் அதனை வைத்து, பிறகு பயன்படுத்தி கொள்ளலாம்.

தேங்காய் பால் பயன்படுத்தும் முறை:

இதனை நீங்கள் பயன்படுத்தும் போது சிறிது சூடாக்கி முடிவேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். கண்டிஷனர் போல் செயல்படும் பண்பும் தேங்காய் பாலுக்கு உண்டு. 1 மணி நேரம் இதனை அப்படியே வைத்துவிட்டு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு குளிக்கவும். வாரம் ஒரு முறை இதனை செய்து வர, நல்ல பலன் கிடைப்பதை உணர முடியும்.

எலுமிச்சை சாறு:

தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு கலந்தும் பயன்படுத்தலாம். உங்கள் முடிவேர்க்கால்கள் எண்ணெய் அதிகம் நிறைந்ததாக இருந்தால் இதனை கட்டாயம் முயற்சித்து பாருங்கள். நான்கு தேக்கரண்டி தேங்காய் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை 4 மணி நேரம் குளிர வைக்கவும். அதன்பிறகு இதனை தலைமுடியில் தேய்த்து சில நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். தலைமுடியின் நல்ல வளர்ச்சிக்கு வாரம் ஒரு முறை இதனை முயற்சித்து பாருங்கள்.

No comments:

Post a Comment