Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 20, 2020

கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்!


கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள இந்த பொருளை பயன்படுத்துங்கள்!

இந்த காலகட்டத்தில் அனைவரும் செல்போனை பயன்படுத்துவதால் அதிகமான கண் குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஒருசிலருக்கு குழந்தையிலேயே தூரப்பார்வை கிட்டப்பார்வை என பல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

தூரப்பார்வை கிட்டப்பார்வை இரண்டையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முறை1:

1.முதலில் விளக்கெண்ணையை எடுத்துக்கொள்ளவேண்டும் ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவார்கள்.

2. அதனை ஒரு சொட்டு எடுத்து முதலில் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் மெதுவாக தேய்க்க வேண்டும்.

3. பிறகு உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெயை எடுத்து தேய்க்க வேண்டும்.

4. பின் சிறிது எண்ணெய் எடுத்த கை மடக்கும் இடத்தில் எண்ணையை பூசி மசாஜ் செய்யவேண்டும்.

5. இதனை வாரத்திற்கு இருமுறை செய்வதால் கண்களில் உள்ள குறைபாடுகள் மறையும்.

முறை 2:

1. பொன்னாங்கண்ணிக்கீரை அனைவருக்கும் தெரியும்.அது வைட்டமின் A அதிகமாக இருப்பதனால் அதில் உள்ள சத்துகள் கண்ணில் உள்ள குறைபாடு உள்ளவற்றை நீக்கும் அற்புதமான சக்தி கொண்டது.

2.வாரத்திற்கு மூன்று முறை இதனை பொரியல் போல செய்து சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் நீங்க ஆரம்பிக்கும்.

3.பருப்பு போட்டு கடைந்து சாப்பிட வேண்டாம். வெறும் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வர கீரையின் முழுமையான பயன்கள் கிடைக்கும்.

முறை 3:

1.கேரட் அனைவருக்கும் தெரியும். அதில் உள்ள வைட்டமின் A சத்துகள் மாலைக்கண் நோயை சரிசெய்ய வல்லமை கொண்டது.

2.நான்கைந்து கேரட்களை எடுத்து அதனை துண்டு துண்டாக வெட்டி மிக்சியில் போடவும்.பிறகு சுவைக்காக தேங்காய் சேர்க்கலாம் அல்லது விட்டுவிடலாம்.

3.நன்கு அரைந்ததும் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டும் பொழுது பாலை சேர்த்து வடிகட்டினால் முழுமையான சத்துக்கள் இறங்கும். காய்ச்சிய சூடான பாலை பயன்படுத்தலாம்.

4. முழுமையாக வடிகட்டிய உடன் அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த வேண்டாம்.

5. இதை காலையில் உணவாக கொடுக்கலாம். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கும்.

குழந்தைகளுக்கு அனைவருக்கும் கொடுக்கலாம் எப்பேர்பட்ட கண் நோய்களாக இருந்தாலும் சரியாகிவிடும்.

No comments:

Post a Comment