Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 16, 2020

நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க தடை! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியரின் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விருப்பமுடைய மாணவர்கள், பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் எச்சில் துப்பக் கூடாது. ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி பயன்படுத்த கூடாது உள்ளிட்ட, பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது.\

இந்நிலையில், செப்டம்பர் 30 வரை பள்ளிகளை திறக்க தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment