Search This Blog

Wednesday, September 16, 2020

இறுதி செமஸ்டருக்கு முன் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை!.

0 comments
இறுதி செமஸ்டருக்கு முன் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், இளநிலைப் படிப்புகளின் ஐந்தாவது செமஸ்டர் தேர்வை கணக்கில் கொண்டு முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு முடிவதற்கு முன்பே, முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புப் படித்து வரும் மாணவர்களுக்கு இன்னும் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே முதுகலை மாணவர் சேர்க்கை பற்றி கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment