JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் குறித்த விவரங்களை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கடந்த டிச., 8ம் தேதி நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை பாட வாரியாக தயாரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அத்துடன், 2019, ஆக., 1ம் தேதியிலான பணியாளர் நிர்ணயத்தின்படி, ஆசிரியரின்றி,உபரி என கண்டறியப்பட்டு, அரசின் பொது தொகுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும், காலிப்பணியிடங்களாக அறிக்கையில் சேர்க்க கூடாது. இப்பணிகளை, தாமதமின்றி முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment