JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தளராத மனமும் தலைமைப் பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... பல வகையிலும் முன்னேறத் துடிக்கும் உங்களுக்கு வரும் 2023 ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ராசிக்கு 9-ம் வீடான மேஷத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு சீராக இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிகப் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. எதிரிகள் விலகி ஓடுவர். கடன் பிரச்னைகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். தோற்றத்தில் தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். புதிய வீடு வாங்கும் யோகம் வாய்க்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அதிகரிக்கும்.

குரு பகவான்
ராசிக்கு 5-ம் வீட்டான தனுசில் புதன் சஞ்சாரம் செய்யும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. எனவே மிக நல்ல பலன்கள் உண்டாகும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டில் வசதிகளை அதிகரிப்பீர்கள். மனதுக்குப் பிடித்த மின்னணு சாதன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சுக்கிரன் மகரத்தில் சஞ்சரிப்ப்தால் செலவுகளும் அதிகரித்தவண்ணம் இருக்கும். வாகனப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
8-9ல் குரு... உங்கள் ராசிக்குப் பலன்கள் எப்படி?
22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீடான மீனத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். உங்கள் இரண்டாம் வீடான கன்னியை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் சுபச் செலவுகள் வந்துபோகும். என்றாலும் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு.
23.4.2023 முதல் வருடம் முடிய ராசிக்கு 9-ம் வீடான மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் பதவி, புகழ், கௌரவம் தேடிவரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியினருக்கு அது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் தங்க ஆபரணங்கள் வாங்கும் யோகங்கள் வாய்க்கும். தடைப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணம் அமையும்
.

சனி பகவான்
சனியின் சஞ்சரம் எப்படி?
ஆண்டு தொடங்கும்போது சனிபகவான் 6 ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருந்க்கிறார். இதனால் பிரச்னைகளை சமாளிக்கும் வலிமை கூடும். முதலீடுகள் லாபம் தரும். பிரபலங்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7 - ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் செயல்களில் சிறு தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். மனதை அலைபாய விடாமல் இருக்க யோகா முதலிய பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
ராகு - கேது பெயர்ச்சி சிம்மத்துக்கு எப்படி?
8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் செயல்கள் வெற்றிகரமாக முடியும் பணவரவும் அதிகரிக்கும். திட்டமிட்டுக் காரியங்களை முடிப்பீர்கள். ராகு பகவான் 9 ம் வீட்டில் நிற்பதால் பணவரவு அதிகமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அளவுக்கு செலவுகளும் வரிசைகட்டும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வந்துபோகும். 9.10.2023 முதல் வருடம் முடியும் வரை கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் எதிலும் நிதானம் தேவை. சொற்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

ராகு கேது
வியாபாரம்: வியாபாரம் சிறக்கும். பழைய சரக்குகளை சலுகை விலையில் விற்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும். ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் எதிர்பாராத திடீர் திருப்பங்களும், அதிரடி லாபங்களும் உண்டாகும்.
உத்தியோகம்: பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு இனி உண்டு. என்றாலும் அலுவலக ரகசியங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாகப் பார்த்துக்கொள்வதன் மூலம் வீண் பழியிலிருந்து தப்பிக்கலாம்.மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன் பதவி புகழையும் பணத்தையும் தந்து உயர வைக்கும்.
No comments:
Post a Comment