JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பும் மேஷ ராசி அன்பர்களே... எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்தான்.
அப்படிப்பட்ட உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எவ்வாறு அமையப்போகிறது என்பதை இப்போது காண்போம்.
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் வேளையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். இதுவரை நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் கூடிவரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். சிலர் புதிதாக வீடு மனை வாங்கத் திட்டம் தீட்டுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரின் சுயரூபம் தெரியவரும். அதற்கேற்ப அவர்களின் தொடர்புகளைத் துண்டிப்பீர்கள்.

மேஷம்
அதேவேளை உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பல சவால்களும் செலவுகளும் இருந்தபடி இருக்கும். ஆனால் அதற்கேற்பப் பொருள்வரவும் மன தைரியமும் வாய்க்கும். உடல் நலனில் மட்டும் அக்கறை செலுத்துங்கள். மனதுக்குள் தேவையில்லாத பயம் அல்லது அழுத்தத்தைத் தவிருங்கள்.
ராசிக்குள் வரும் குரு
22.4.2023 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீடான மீனத்திலேயே இருப்பதால் செலவுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஆனாலும் சுபகாரியங்களுக்காகவும் இறைவழிபாட்டுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். நீண்ட காலமாக வெளிநாடு செல்லத் திட்டமிட்டு கைகூடாமல் தவிப்பவர்கள் இப்போது முயன்றால் நிச்சயம் நடக்கும்.
23.4.2023 முதல் இந்த ஆண்டு முடியும்வரை ராசிக்குள்ளேயே குருபகவான் அமர்ந்து பலன்தரப் போகிறார். உடல் எடை கூடும் என்பதால் அதில் எச்சரிக்கை அவசியம். உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குறிப்பாக வாழ்க்கைத்துணையிடம் ஈகோ வேண்டாம். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.

சனிபகவான்
10 - 11 ம் வீடுகளில் சனிபகவான் சாதகமா?
சனிபகவான் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் பல நல்ல பலன்கள் உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கனிந்துவரும். பணவரவுக்குக் குறைவிருக்காது. சமூகத்தில் உங்களுக்குப் புகழ், கௌரவம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும்.
அதிசார சனி
29.03.2023 முதல் 23.08.2023 வரை சனிபகவான் அதிசாரமாகக் கும்ப ராசியில் சென்று சஞ்சரிக்க இருப்பதால் பலவிதங்களிலும் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.
ராகு - கேது அருளும் பலன்கள்
8.10.2023 வரை ராசிக்குள்ளே ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுபகவானால் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். 9.10.2023 முதல் வருடம் முடியும்வரை ராகுபகவான் ராசியிலிருந்து விலகி 12-ம் வீடான மீனத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கேது 6-ம் வீடான கன்னியில் சஞ்சாரம் செய்வார். இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். முதலீடுகள் லாபகரமாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்பில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

ராகு கேது
வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் விலகி சுமுகமான நிலை நிலவும். புதிய முதலீடுகளின் மூலம் சந்தையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணியாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார்கள்.
உத்தியோகம்: பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். எதிர்பார்த்த பதவி உயர்வு,சம்பள உயர்வு இந்த ஆண்டு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.மொத்தத்தில் ஆண்டின் முற்பகுதியில் சில சவால்கள் இருந்தாலும் பிற்பகுதியில் உழைப்பால் முன்னேறி சாதிக்கும் ஆண்டாக அமையும்.
No comments:
Post a Comment