Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 12, 2023

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பது நல்லதா? யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா?

உடல் எடையை குறைக்கும் வீட்டு வைத்தியங்களின் பட்டியலில் முதலில் இருப்பது, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம்.

உடல் எடையை குறைக்க பலர் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கிறார்கள். பலர் இதை ஒரு காலை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த பானம் உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக இப்போது குளிர்காலத்தில் சூடாக பருகும் இந்த பானத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். குளிர்காலத்தில் அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க இந்த பானம் உங்களுக்கு உதவும். ஆனால் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை நீரை குடிப்பது சிலருக்கு மோசமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆம், சில சந்தர்ப்பங்களில், இந்த பானம் வயிற்றில் எரியும் உணர்வு மற்றும் வயிற்று வலியைக்கூட ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான காலை பழக்கமா? இல்லையா? யாருக்கு பாதிப்பு ஏற்படும் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
காலையில் தேன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் அடிக்கடி வெறும் வயிற்றில் தேன் குடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால் அது நாள் முழுவதும் நீடிக்கும் உடனடி ஆற்றல் ஊக்கத்தை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், படுக்கைக்கு முன் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுவது, நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், செரிமானம், உடல் மற்றும் மனதை தளர்த்தவும் உதவுகிறது. ஆதலால், தேன் ஒரு சிறந்த இயற்கை அமுதம் என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் குடித்து வந்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமுள்ளது

தேன் மற்றும் எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் போராட உதவுகின்றன. எனவே, நிபுணர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்க பரிந்துரைக்கின்றனர்.

கொழுப்பை எரிக்க உதவுகிறது

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த பானம் ஒரு சிறந்த காலை பானமாகும். எனவே ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் கொழுப்பை எரிக்க உதவுகிறது. உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க விரும்பினால், தினமும் காலை வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்த இந்த பானத்தை குடியுங்கள்.

தேன் மற்றும் எலுமிச்சை நீரை எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த பானம் தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது. மேலும் 200 முதல் 250 மில்லி தேன் சிறிதளவு எலுமிச்சை நீரை சேர்த்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும். பானத்தை வேகமாக குடிக்க வேண்டாம். 

மெதுவாக குடித்து, அதன் சுவையை அனுபவிக்கவும். சுமார் இரண்டு மாதங்கள் இந்த பானத்தை குடித்து வாருங்கள், தொப்பை குறைவதை நீங்களே கவனிப்பீர்கள்.

இந்த பானத்தை யார் தவிர்க்க வேண்டும்?

வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை நீரைக் குடித்த பிறகு உங்கள் வயிறு எரிவதை போன்று உணர்ந்தால், உங்களுக்கு அமிலத்தன்மை அல்லது வயிற்றுப் புண் இருக்கலாம். இது ஒருவேளை உங்கள் வயிற்றை எரிச்சலடையச் செய்யும் மற்றும் உங்கள் வலியை அதிகரிக்கலாம். ஆதலால், வயிற்றுப்புண் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை உட்கொள்ள வேண்டாம்.

நீரிழிவு நோயாளிகள்

தேனின் இனிப்பு உள்ளடக்கம் இருப்பதால் தேன் மற்றும் எலுமிச்சை நீர் உங்களுக்கு நல்லதல்ல. எனவே, நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் சர்க்கரை, தேன் அல்லது பிரக்டோஸ் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள்

நீங்கள் சமீபத்தில் எடை இழப்பு அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இந்த பானத்தை குடிக்க வேண்டாம். உப்பு மற்றும் சர்க்கரைக்கு உடலின் உணர்திறனை அதிகரிக்கும் உணவுகளிலிருந்து தினமும் விலகி இருப்பது நல்லது. தங்கள் உடல் நிலைமைக்கு ஏற்ப உணவுகளையும், பானங்களையும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment