Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 1, 2023

திரிபலா பொடி: இரவில் சாப்பிட்டு வர இளமையை தக்கவைக்கலாம்!


உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் முக்கியமானது, `திரிபலா பொடி'.

இது இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. சரி, திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

கடுக்காய்வயிற்றுவலிக்கு கடுக்காய்... வாய்ப்புண்ணுக்கு மாசிக்காய்... குழந்தைகளுக்கான எளிய வைத்தியங்கள்

நன்மை தரும் நாட்டு மருந்து

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில் கொள்ளவும்.

* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாற்றைச் சரிசெய்யும்.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவும். மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும்.

* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்கும். செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவும்.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதயநோய்கள் வராமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும். ரத்தசோகையை சரிசெய்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். .
* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். உடலில் குளூக்கோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவும். திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

திரிபலா பொடி

திரிபலாவை சாப்பிடும் முறைகள்

* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடிய திரிபலா பொடியை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment