Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 1, 2023

அரசுத்துறை சேவைகளில் 'பான் கார்டு' பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

அரசுத்துறை சேவைகளில் 'பான் கார்டு' பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது..

நமது நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 76% அதிகரித்துள்ளது. அதேபோல மக்களின் இணைய பரிவர்த்தனை பயன்பாடு 4.5 லட்சம் கோடியில் இருந்து 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

5ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். அதேபோல தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.

பான் எண் வைத்திருக்க வேண்டிய வணிக நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட அரசு துறை நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக பான் கார்டு பயன்படுத்தப்படும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment