JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொதுவாக கீரைகள் இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த ஒரு நல்ல உணவாகும் .தினம் ஒரு கீரை சேர்த்து கொள்வதால் நம் உடலில் பல நோய்கள் குணமாகிறது .அதனால்தான் அந்த காலத்தில் சித்தர்கள் கூட தங்களின் மருத்துவ குறிப்பாக கீரைகளின் மகத்துவத்தை பற்றி எழுதி வைத்து விட்டு சென்றனர் .அதிலும் மூக்கிரட்டை கீரையில் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகச் சாதாரணமாக அடிக்கடி வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. மூக்கிரட்டை கீரை இதற்கு அதிமருந்தாகும்.

2.உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலை கொடுத்து எடையைக் குறைக்க இந்த கீரை உதவி புரிகின்றது.
3.சிலருக்கு சிறுநீர்கடுப்பு பிரச்சனை இருக்கும் .இந்த பிரச்சினை உள்ளவர்கள் மூக்கிரட்டை கீரையை எடுத்து கொண்டால் சிறுநீர் வலியின்றி வெளியேற்றுவதற்கு அது உதவும்
4.மேலும் இந்த கீரை கல்லீரலை பலப்படுத்தும்
5.இந்த மூக்கிரட்டை கீரையால் உடல் வீக்கம், மூச்சிரைப்பு , கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் போன்ற நோய்களை குணப்டுத்தும்
6.மேலும் இந்த கீரை கேன்சர் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும்
7.இந்த கீரை மூச்சிரைப்பு முதல் மல சிக்கல் வரை தீர்க்கும் .அதுமட்டுமல்லாமல் இதய கோளாறுகள் வராமல் காக்கும்
No comments:
Post a Comment