JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நமது சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் குறைவு .ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் தேங்காய்தான் .இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சட்னி ,மதியம் தேங்காய் குருமா ,இரவு தேங்காய் புட்டு ,தேங்காய் பால் என்று விதம்விதமாக சமைத்து சாப்பிடுவோம் ,மேலும் பொரியல் முதல் அனைத்து உணவிலும் தேங்காயை துருவி சேர்த்து வருவர் ,அந்தளவுக்கு தேங்காயில் நண்மையுண்டு ,தேங்காய் சாப்பிடுவதால் நம் உடல் பெரும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்

1.சிலருக்கு தீராத மல சிக்கல் இருக்கும் ,அவர்கள் இரவு தூங்கும் முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து , மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்.
2.சிலருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும் .அப்படி பட்டவர்கள் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
3.தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.
4.சிலருக்கு முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் .அதனால் தேங்காய் இந்த பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
5.தேங்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் .
No comments:
Post a Comment