Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 23, 2023

கோடை வெயிலுக்கு ஏற்றது!. உடல் எடையை எப்படி குறைப்பது?. முருங்கைக்காய் கசாயம் வைத்து குடியுங்கள்!.

முருங்கைக்காயை கஷாயமாக செய்து குடித்தால் உடல் எடை குறையும். உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

முருங்கை இலை மற்றும் பூவிலும் மருத்துவ பயன்கள் உள்ளன. முருங்கையில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. முருங்கைக்காயை உணவிலும் பயன்படுத்தி சாப்பிடுவது உண்டு.அந்தவகையில், முருங்கைக்காயை கஷாயமாக செய்து குடித்தால் உடல் எடை குறையும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

தேவையற்ற உடல் கொழுப்பு அடிக்கடி வளர்கிறதா? அப்படியானால், முருங்கைகாயை கஷாயம் செய்து குடியுங்கள். பின்னர் கொழுப்பு எவ்வாறு கரையத் தொடங்குகிறது என்பதைப் பாருங்கள். 

இவ்வாறு குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். குறிப்பாக கஷாயம் குடிக்கும் வேளையில் டீ, காபி மற்றும் தண்ணீர் குடிக்கலாமா?என்று மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் அது சர்க்கரை அளவைக் கெடுத்துவிடும்.முருங்கைகாயை கஷாயம் எலும்புகளை வலுவாக்கும். 

இதன் இலைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது. வலிமையான எலும்புகளுக்கு முருங்கைக்காய் கஷாயத்தை அருந்தலாம். அல்லது இதன் கீரையை உணவாக சமைத்தும் சாப்பிடலாம்.

முருங்கைக்காய் கஷாயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கோடையில் மலச்சிக்கலால் அவதிப்படுவோர் இதை முயற்சி செய்யலாம். 

இரத்த சோகை பிரச்சனைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முருங்கைக்காய் உள்ள சத்துக்கள் இரத்த சோகையை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. மூளை சம்பந்தமான ஏதேனும் பிரச்சனை இருந்தால், முருங்கைக்காய் உட்கொள்ளுங்கள். 

இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. சமையலில் முருங்கைக்காயை உணவாக சமைத்தும் சாப்பிடலாம். மேலும் இதை கசாயமாகவும் சூப் செய்தும் குடிக்கலாம். 

இதனை சாப்பிட்டால் இதில் இருக்கும் மொத்த ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.எனவே தினமும் முருங்கைக்காய் அல்லது அதன் கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

No comments:

Post a Comment