Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 26, 2023

மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்!



இன்றைய மக்களிடையே பெரும்பாலும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி, முழங்கால் வலி. மூட்டு வலி வந்து விட்டால் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அதை குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் இதை குணப்படுத்துவதற்கு நீங்கள் அலைய தேவை இல்லை. உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் எளிய ஒரு மூலிகை கொண்டு உங்களது பல்வேறு வலிகளை போக்கிக் கொள்ளலாம்.

மூட்டு வலியானது பல பேரின் வாழ்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது வந்து விட்டால் எந்த வேலையையும் நம்மால் செய்ய முடியாது.

எப்பேர்ப்பட்ட மூட்டு வலி மற்றும் மணிக்கட்டு வலியை போக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை தற்போது பார்ப்போம்.

** இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் எருக்க இலை. இரண்டு இலைகளை பறித்து தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

** அடுத்து ஒரு கற்றாழை மடலை எடுத்து அதில் உள்ள ஜெல்லை மட்டும் 4 ஸ்பூன் அளவு ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். முக்கியமான ஒன்று இதற்கு இயற்கையான ஜெல்லை தான் பயன்படுத்த வேண்டும். கடைகளில் வாங்கியது பயன்படுத்தக் கூடாது.

** பின்னர் அதில் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

** இதை ஒரு ஓரமாக வைத்து விட்டு அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பை பற்ற வைத்து அதில் தலைகீழாக கவிழ்த்து வைக்கவும்.

** தோசைக்கல் லேசாக சூடேறும்பொழுது எருக்க இலை எடுத்து அதன் இருபுறமும் கடுகு எண்ணெயை தடவி சூடான தோசை கல் மீது இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இலையை அதன் மீது வைக்கவும்.

** வலி இருக்கும் முழங்காலை தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த கற்றாழை தைலத்தை மூட்டு வலி உள்ள இடத்தில் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.

** பின்னர் நாம் வாட்டி வைத்த எருக்க இலையை முழங்காலின் மேல் தைலம் தடவிய இடத்தில் வைத்து அப்படியே ஒரு துண்டால் கட்டி விடவும். இலையானது பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்.

** இந்த வைத்திய முறையை நாம் தூங்குவதற்கு முன்னால் இரவில் செய்வது மிகவும் நல்லது. அதை அப்படியே இரவு முழுவதும் வைத்திருந்து விட்டு காலையில் எழுந்ததும் துண்டை அவிழ்த்துவிட்டு காலை சுத்தம் செய்யவும்.

** இந்த முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும். இதன்மூலம் நமது முழங்காலில் உள்ள வலி இருந்த இடம் தெரியாமல் போகும். அதேபோல் மணிக்கட்டு மற்றும் கை மூட்டு பகுதியிலும் செய்யலாம்.

No comments:

Post a Comment