Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

காலைச் சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவு வகைகள் :வாரத்தில் 2 நாட்கள் சிறுதானியங்கள் வழங்க பரிந்துரை!

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதேயொட்டி உணவு வகைகளை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பட்டியலின் படி

திங்கள் : காய்கறி சம்பாருடன் ரவா உப்புமா / சேமியா உப்புமா/ அரிசி உப்புமா/ கோதுமை ரவை உப்புமா

செவ்வாய்க்கிழமை :காய்கறி சம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி

புதன்கிழமை: காய்கறி சம்பாருடன் கூடிய ரவா பொங்கல்/ வெண் பொங்கல்

வியாழக்கிழமை : காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா/ ரவா உப்புமா /கோதுமை உப்புமா

வெள்ளிக்கிழமை :காய்கறி சம்பாருடன் சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாரத்தில் 2 நாட்களிலாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம், ஒரு மாணவ/மாணவியருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி/ ரவை/ கோதுமை ரவை + காய்கறிகள் என வழங்கவேண்டும். சமைத்த பின் உணவு 150-200 கிராம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment